தொடரும் இருசக்கர வாகன திருட்டு – சிசிடிவி காட்சிகள் பரபரப்பு

தொடரும் இருசக்கர வாகன திருட்டு – சிசிடிவி காட்சிகள் பரபரப்பு
X
தூத்துக்குடியில் தொடரும் இருசக்கர வாகன திருட்டு – சிசிடிவி காட்சிகள் பரபரப்பு
தூத்துக்குடி மாநகரின் வடபகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்களில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கூலி தொழிலாளர்கள் உள்ளிட்டோர் வீட்டின் வெளியே நிறுத்திய வாகனங்கள் அடிக்கடி திருடப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்தாலும், வழக்குகள் முறையாக பதிவு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. தற்போது பல பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடும் கும்பலின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. திருடர்கள் பெரும்பாலும் ஸ்ப்லென்டர் ரக பைக்குகளை குறிவைத்து வருகின்றனர். சிறுவர்களே இக்கும்பலில் அதிகம் இருப்பதாகவும், அவர்கள் பிற குற்றச்செயல்களில் ஈடுபடும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story