தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர் தற்கொலை

X
Komarapalayam King 24x7 |7 Oct 2025 5:57 PM ISTகுமாரபாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
குமாரபாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக்., மூன்றாம் ஆண்டு படித்து வருபவர் புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக் குடிப்பகுதியைச் சேர்ந்த கோகுல், 19. இவர் நேற்றுமுன்தினம் இரவு, விடுதியில் உணவு அருந்திவிட்டு நள்ளிரவு வரை நண்பர்களுடன் பேசிவிட்டு படுக்கச் சென்றார். அவருடன் சக மாணவர்களும் படுத்திருந்தனர். நேற்று காலை ஏழு மணி அளவில் வழக்கம் போல் கோகுலுடன் தங்கி இருந்த ஹரி என்ற மாணவர் கழிப்பறைக்கு செல்வதற்காக சென்ற போது, கழிப்பறை கதவை திறக்க முடியாமல் திறந்து பார்த்த போது, லோயர் டவுசர் நாடாவினால், கம்பியில் தூக்கிட்டு, கோகுல் சடலமாக தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கல்லூரியின் வார்டன் இளவரசனுக்கு தகவல் அளித்ததின் பேரில், இளவரசன் உடனடியாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
Next Story
