போச்சம்பள்ளி பகுதிகளில் சாரல் மழை.

X
இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன் பேரில் கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள போச்சம்பள்ளி, உள்ளிட்ட பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலை வானம் மேகமுட்டத்துடன் காணபட்ட நிலையில் 5,30 மணிமுதல் புலியூர், அரசம்பட்டி, பாரூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சாரல்மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.
Next Story

