மயங்கி விழுந்து இறந்த மூதாட்டி

மயங்கி  விழுந்து இறந்த மூதாட்டி
X
குமாரபாளையத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து இறந்தார்.
குமாரபாளையம் பெரியார் நகர் பகுதியில் வசித்து வந்தவர் சின்னதாயி, 80. இவர் நேற்றுமுன்தினம் காலை 07:00 மணியளவில் வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. காவிரி பழைய பாலம் அருகே மயங்கி விழுந்த இவரை, அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு 10:00 மணியளவில் இறந்தார். இதுகுறித்து இவரது மகள் பழனியம்மாள், 58, புகார் கொடுக்க, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story