தமிழக சோசலிஸ்ட் தொழிற்சங்க பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்

X
தூத்துக்குடியில் தமிழக சோசியலிஸ்ட் தொழிற்சங்க பேரவை சார்பில் அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் டிக்கெட் கேன்வாசர் தொழிலாளர்களுக்கு கருணை அடிப்படையில் ஊதிய உயர்வு மற்றும் அடையாள அட்டை வழங்க வேண்டும் மேலும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற பொதுத் துறை நிறுவனங்களில் தனியார் மயமாக்கல் நடவடிக்கை கைவிட வேண்டும் உட்பள தொழிலாளர்களுக்கு நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும் சலுகைகளை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தமிழக அரசு மற்றும் போக்குவரத்து துறை தங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தமிழக சோசலிஸ்ட் தொழிற்சங்க பேரவை அமைப்பினர் தெரிவித்தனர் இதில் கலந்து கொண்ட தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த டிக்கெட் கேன்வாசர்கள் மற்றும் தொழில் சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்
Next Story

