ஓசூர்: கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த நபரிடம் சோதனையிட்டதில் அவர் 4 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் அவரிடம் விசாரணை செய்ததில் அவர் திண்டுக்கல் மாவட்டம் கொல்லம்பட்டறையை சேர்ந்த விஜய் (25)என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story

