ஊத்தங்கரை அருகே மாணவரை அடித்ததாக ஆசிரியா் மீது வழக்கு பதிவு.

X
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள கொம்மம்பட்டு பகுதியைச் சோ்ந்த சங்கா் இவரது மகன் திருமலை (14) இவா் உப்பாரப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த வாரம் காலாண்டு விடுமுறை முடித்து நேற்று பள்ளிக்கு வந்த திருமலை, கணித வினாத்தாளுக்கான விடைகளை எழுதிவராததாலும், அப்பாடத்தில் 22 மதிப்பெண் எடுத்ததாலும் ஆசிரியா் முரளி பிரம்பால் அடித்தாக கூறப்படுகிறது. இதனால் மாணவன் காயமடைந்து ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டார். இதுகுறித்து மாணவரின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் ஆசிரியா் முரளி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

