பர்கூர் அருகே காரில் புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது.

X
கிருஷ்ணகிரி மவட்டம் பர்கூர் போலீசார், பர்கூர் ஜெகதேவி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தியபோது இந்த காரை நிறுத்தாமல் சென்றது. போலீசார் அந்த கரை துரத்தியபோது வேப்பனப்பள்ளி அருகே காரை நிறுத்திவிட்டு தப்பித்து ஓடிவிட்டார். காரை சோதனை செய்ததில் 267 கிலோ அளவில், ரூ.1.93 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து காரின் பதிவு எண்ணை கொண்டு காரின் உரிமையாளரான ஜெகதேவி, ஞானாம்மாள் காலனியை சேர்ந்த நதீம் (7) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவர் ராஜஸ் தான் மாநிலத்தை சேர்ந்த பாபுசிங் என்பவரை தேடி வருகிறார்கள்.
Next Story

