கிருஷ்ணகிரி: "உங்களுடன் ஸ்டாலின்" முகாமை மாவட்ட கலெக்டர் ஆய்வு.

X
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், போகனப்பள்ளி கிராமம், காட்டிநாயனப்பள்ளி, பெத்தனப்பள்ளி ஊராட்சிக்கு நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்களில், துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன், வட்டாட்சியர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story

