நான்கு பேர் மீது ஆசிட் வீச்சு - போலீசார் விசாரணை

X
திண்டுக்கல் மாவட்டம் பெரிய பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த லட்சுமனன், லட்சுமி,சென்றாயன், ராஜா ஆகியோர்கள் மகேந்திரன் வீட்டு அருகே உள்ள மரத்தடியில் கேரம் போர்டு, தாயம், செஸ் போன்ற விளையாட்டுகளை விளையாடிக் கொண்டு இருந்தனர் அப்பொழுது வீட்டருகே விளையாடக் கூடாது என மகேந்திரன் கூறி உள்ளார் அவரின் ச்சை கேட்காமல் 10க்கும் மேற்பட்டோர் மகேந்திரன் பேச்சை மீறி அங்கு விளையாடிக் கொண்டிருந்துள்ளனரௌ .இதில் ஆத்திரம் அடைந்த மகேந்திரன் வீட்டில் தோல் கழிவுகளுக்கு முடியை சுத்தம் செய்யும் ஆசிட்டை அவர்கள் மீது வீசியதில் நான்கு பேர் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து மருத்துவ மனைக்கு வந்த தாலுகா போலீஸார் ஆசிட் வீசிவிட்டு தப்பி ஓடிய மகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீதுஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

