தேர்வுகளில் தங்கப்பதக்கம் வென்ற மகாராணி கல்லூரி மாணவிகள்

X
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முது நிலை பட்டப்படிப்புகளுக்கு தேர்வுகள் நடந்தது. இதில் தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள், பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் மற்றும் தரவரிசை பட்டியலில் இடங்களை பிடித்து சாதனை படைத்தனர். குறிப்பாக எம்.எஸ்சி. கணினி அறிவியல் பாடப்பிரிவில் நஸ்ஹத்துனிசா முதலிடம் பிடித்து தங்கப்பதக்கமும், பி.எஸ்சி. கணிதம் மற்றும் கணினி பயன்பாட்டியல் பாடப்பிரிவில் ஜனத்துல் பிர்தோஷ் 2-ம் இடமும், பி.ஏ. ஆங்கிலம் பாடப்பிரிவில் மோசினா பர்வீன் 3-வது இடமும், பி.சி.ஏ. பாடப்பிரிவில் பர்சானா 5-ம் இடமும், எம்.காம். சி.ஏ. பாடப் பிரிவில் கோகிலா 6-ம் இடமும், மோகனப்ரியா 7-ம் இடமும், பி.எஸ்சி. சி.டி.எப். பாடப்பிரிவில் ரஸ்வின் 9-ம் இடமும் பெற்றனர். தங்கப்பதக்கமும், தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த மாணவிகளை கல்லூரித் தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் சுலைமான், பொருளாளர் சுப்பிரமணியம், துணை தலைவர் தமிழரசன், இணை செயலாளர் சிராஜிதீன், கல்லூரி இயக்குனர்கள் அப்துல்ரகுமான், முகமது அப்துல் காதர், கல்லூரி முதல்வர் தமிழ்ச்செல்வி ஆகியோர் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினர்.
Next Story

