அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கியவர் கைது

அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கியவர் கைது
X
கைது
கம்பம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். அரசு பேருந்து ஓட்டுனரான இவர் நேற்று (அக்.7) கூடலூர் பகுதியில் பேருந்து பயணிகளை இறக்கிவிட்டு பேருந்தை இயக்க முற்பட்டுள்ளார். அப்பொழுது அப்பகுதியை சேர்ந்த பரத் என்பவர் பேருந்தை அடித்து சேதப்படுத்தி உள்ளார். இதுகுறித்து கேட்ட பாஸ்கரனை சரமாரியாக பரத் தாக்கி உள்ளார். இதுகுறித்த புகாரில் கூடலூர் வடக்கு காவல்துறையினர் பரத் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story