மக்னா காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !

X
கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே, தமிழக - கேரளா எல்லைப் பகுதியில் உடலில் காயங்களுடன் சுற்றித் திரிந்த மக்னா காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கேரளா வனப்பகுதியிலிருந்து கடந்த ஒரு வாரமாக கூடப்பட்டி மலைப்பகுதிக்குள் வந்த யானைக்கு, பெரியநாயக்கன்பாளையம் வனத் துறை அதிகாரிகள் வாழை, பலா போன்ற பழங்களில் மருந்துகள் வைத்து சிகிச்சை அளித்தனர். ஆனால் யானை இரண்டு மாநில வனப்பகுதிகளுக்கும் மாறி சென்று வந்ததால் சிகிச்சை முறையாக வழங்க முடியவில்லை. இந்நிலையில் பவானி ஆற்றின் மையப் பகுதியில் நின்றிருந்த யானைக்கு தமிழக மற்றும் கேரள வனத்துறை இணைந்து கண்காணிப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கை மேற்கொண்டது. வனக் கால்நடை மருத்துவர் வெண்ணிலா தலைமையில் மருத்துவக் குழு மருந்து தெளித்து சிகிச்சை அளித்தபோதும், காயம் தீவிரமடைந்ததால் யானை நேற்று இரவு உயிரிழந்தது. இந்த சம்பவம் வனத் துறை அதிகாரிகள் மற்றும் வன உயிர் ஆர்வலர்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

