கோவையில் வனக்காவலர்கள் மூவர் கையும் களவுமாக கைது !

கோவையில் வனக்காவலர்கள் மூவர் கையும் களவுமாக கைது !
X
லஞ்சம் வாங்கியதாக வன காவலர்கள் மூவர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் ஆனைகட்டி சாலையில் உள்ள தமிழக–கேரள எல்லை வன சோதனைச் சாவடிகளில் லஞ்சம் பெற்ற மூன்று வனக்காவலர்களை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். பல்லடத்தில் இருந்து கேரளாவுக்கு கோழி எருவுகளை எடுத்து சென்ற லாரி ஓட்டுநரிடம், மாங்கரை சோதனைச் சாவடியில் வனக்காப்பாளர் செல்வகுமார் மற்றும் ஆனைகட்டி சாவடியில் வனக்காவலர்கள் சதீஷ்குமார், சுப்பிரமணியம் ஆகியோர் தலா ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் வந்தது. அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் இரசாயனம் தடவிய நோட்டுகளுடன் சோதனை நடத்தியபோது மூவரும் லஞ்சம் பெறும் நேரத்தில் கையும் களவுமாக பிடிபட்டனர். மூவரிடமும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை லஞ்ச ஒழிப்பு துறை காவல் ஆய்வாளர் பிரபுதாஸ், அறுமுகம் மற்றும் ADSP ராஜேஷ் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story