கோவையில் ஊருக்குள் வரும் மான் கூட்டம் – பாதுகாப்பு நடவடிக்கை கோரி பொதுமக்கள் வலியுறுத்தல்!

கோவையில் ஊருக்குள் வரும் மான் கூட்டம்  – பாதுகாப்பு நடவடிக்கை கோரி பொதுமக்கள் வலியுறுத்தல்!
X
மான்கள் ஊருக்குள் புகுந்து சுற்றல் – வனத்துறை நடவடிக்கை கோரி பொதுமக்கள் கோரிக்கை.
கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் தேடி பத்துக்கும் மேற்பட்ட மான்கள் குட்டிகளுடன் ஊருக்குள் சுற்றித் திரிந்தன. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மான்கள் மீது தெருநாய்கள் தாக்கும் அபாயம் நிலவுவதால், அவற்றை பாதுகாக்க வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மான்கள் ஊருக்குள் சுற்றித் திரியும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Next Story