கோவையில் காட்டு யானை கலக்கம் : அம்மன் கோவிலில் சிக்கித் தவிப்பு!

கோவையில் காட்டு யானை கலக்கம் : அம்மன் கோவிலில் சிக்கித் தவிப்பு!
X
தானிக்கண்டி மலை கிராமத்தில் யானை கோவில் புகுந்து பரபரப்பு – வனத்துறையினர் விரட்டினர்.
கோவை, தொண்டாமுத்தூர் அருகே நரசிபுரம் அடுத்த தானிக்கண்டி மலை கிராமத்தில், நேற்று இரவு உணவு தேடி வந்த ஒற்றைக் காட்டு யானை பழங்குடியினர் வழிபடும் அம்மன் கோவிலுக்குள் நுழைந்து வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தது. தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் பட்டாசு வெடித்தும், சத்தம் எழுப்பியும் யானையை வெளியேற்றி காட்டுக்குள் விரட்டினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Next Story