கரூரில் தொழிலாளியை அடித்துக் கொன்ற இருவர் கைது.

கரூரில் தொழிலாளியை அடித்துக் கொன்ற இருவர் கைது.
கரூரில் தொழிலாளியை அடித்துக் கொன்ற இருவர் கைது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட படிக்கட்டு துறை பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி வயது 60. இவர் தனியார் ஹோட்டலில்தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று காலை லைட் ஹவுஸ் கார்னரில் உள்ள ஒரு டீக்கடையின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சின்னதுரை மகன் வயது 19,கரூர் மக்கள் பாதை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் மது போதையில் அந்த வழியாக கூச்சலிட்டு சென்றுள்ளனர். இதனை கண்ட சுப்பிரமணி தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரண்ராஜ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் சேர்ந்து சுப்பிரமணியை அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே எதிர்பாராத விதமாக அவர் உயிர் இழந்தார். இந்த சம்பவம் அறிந்த கரூர் மாநகர காவல் துறையினர் சுப்பிரமணியை தாக்கிய சரண்ராஜ் மற்றும் சிறுவனை கைது செய்தனர்.
Next Story