கரூர் சம்பவத்தில் பலியான சிறுவனின் தந்தை சிபிஐ விசாரணைக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு.

கரூர் சம்பவத்தில் பலியான சிறுவனின் தந்தை சிபிஐ விசாரணைக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு.
கரூர் சம்பவத்தில் பலியான சிறுவனின் தந்தை சிபிஐ விசாரணைக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு. கடந்த மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கரூர் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பரப்புரையின்போது 41 பேர் பலியாகினர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அரசின் சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலும், ஐ ஜி அஸ்ரா கார்க் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை குழு விசாரணை செய்து வருகிறது. இந்த சம்பவத்தில் பலியான 13 வயது சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் பிச்சமுத்து இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல பாஜகவை சேர்ந்த உமா ஆனந்த் என்பவரும் சிபிஐ விசாரணை கேட்டு தனியாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த இரண்டு மனுக்களையும் விரைவாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவர்கள் நேற்று விடுத்த கோரிக்கையின் பேரில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர் கவாய் வரும் 10-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவித்துள்ளார். தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் இந்த விவகாரத்தில் அனைத்து தவறுகளும் அரசு நிர்வாகத்தின் தரப்பில் தான் உள்ளது எனவே சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை தேவை என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story