சோழசிராமணியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.

சோழசிராமணியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.
X
சோழசிராமணியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கே.எஸ்.மூர்த்தி பங்கேற்பு.
பரமத்திவேலூர்,அக்.8: பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் சோழசிராமணி அரசு மேல்நிலை பள்ளியில் ஜமீன் இளம்பள்ளி, சோழசிராமணி ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கபிலர்மலை வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் தளபதி சுப்பிரமணியம் தலைமை வகித்தார். கபிலர்மலை மத்திய ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் வக்கீல் சரவணகுமார் முன்னிலை வகித்தார். கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) மலர்விழி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.எல்.ஏ.வும், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு உங்களுடன் ஸ்டாலின் முகாமினை நேரில் பார்வையிட்டு பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பரமத்தி வேலூர் தாசில்தார் கோவிந்தசாமி பரமத்திவேலூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கருணாநிதி,பெருங்குறிச்சி முன்னாள் ஊராட்சி தலைவர்  மாணிக்கம், குப்பிரிக்காபாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் அரசு என்கிற பழனிசாமி, சுள்ளிப்பாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் தண்டபாணி, ஜமீன் இளம்பள்ளி முன்னாள் ஊராட்சி தலைவர் அபிராமி தங்கவேல் மற்றும் ஊராட்சி செயலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story