தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புச் சுவரு இல்லாமல் வாகன ஓட்டிகள் பெரும் அவதி

X
தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் ஊட்டத்தூர் பிரிவு ரோடு பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும், உறுப்பிழப்பும் அதிகவில் ஏற்ப்பட்டு வந்ததால் இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க பலதரப்பில் இருந்து கோரிக்கை வைத்ததை தொடர்ந்து மேம்பாலம் அமைப்பட்டுள்ளது சிறப்புதான், ஆனால் இந்த மேம்பாலத்தில் திருச்சியில் இருந்து பெரம்பலூர் செல்லும் வழிப்பகுதியில் பாலத்தின் ஆரம்ப பகுதியிலும், பெரம்பலூரில் இருந்து திருச்சி செல்லும் வழிப்பகுதியின் முடிவு பகுதியிலும் தடுப்பு சுவர் அமைக்கபடாமல் விடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் ஏதோ ஒரு சூழலில் தடுப்பு சுவர் இல்லாத பகுதியில் இருந்து பள்ளமாக உள்ள சர்வீஸ் ரோடு பகுதியில் விழுந்து விபத்துக்கு உள்ளாக நேரிடும். இதில் பல அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளது. இதனை தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் கருத்தில் வைத்து உடனடியாக இந்த பகுதியில் முழுவதுமாக தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என சாலைவழி பயணிகள் கூறி வருகின்றனர். விபத்தினை தவிர்க்க மேம்பாலம் அமைக்கப்பட்டும் தொடருமா விபத்து என இதனை பார்ப்பவர்கள் எல்லோரும் கருத்து கூறி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை துறை நிர்வாகமே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வான ஓட்டிகள் வேண்டுகோள்
Next Story

