தர்மபுரி அகவை தினம் கொண்டாட்டம்

சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் பிரிந்து 60வது ஆண்டை வைர விழாவாக கொண்டாடிய மாணவர்கள்.நாடாளுமன்ற உறுப்பினர் வாழ்த்து தெரிவித்து உரை
சேலம் மாவட்டத்தில் இருந்து 60 ஆண்டுகளுக்கு முன்னர் நிர்வாக சீர்த்திருத்த காரணங்கள் மற்றும் பொதுமக்களின் தேவைகளை விரைவாக செயல்படுத்த புதிய மாவட்டமாக தர்மபுரி பிரிக்கப்பட்டது.இதனை கொண்டாடும் வகையில் ஆண்டுதோரும் இந்த நாளை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக கொண்டாடி வருகிறது. நேற்று புதன்கிழமை அதியமான் கோட்டை அரசு பள்ளி மாணவ மாணவிகள் அதியமான் & அவ்வையார் புகழை பறைசாற்றும் வகையில் புகைப்படங்கள் பதித்த முகமுடிகளை அணிந்து பள்ளியில் இருந்து அதியமான்கோட்டம் வரை ஊர்வலமாக வந்தனர்.இந்த நிகழ்ச்சிக்கு தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி தலைமை தாங்கினார்.மாவட்ட ஆட்சியர் சதீஷ்குமார் உள்ளிட்ட வருவாய்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.பின்னர் இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் பங்கேற்ற பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம். பரதநாட்டியம்.வில்லுபாட்டு.நாடகம்.குழு நடனம் .பேச்சுப்போட்டி கட்டுரை போட்டிகள் நடைபெற்றன.இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நற்சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
Next Story