ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கட்டுமான தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், உள்ளாட்சி,பேரூராட்சி,ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் கொள்கையை வெளியிட வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் நேற்று மாலை தருமபுரி மாவட்டக்குழு சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் சுதர்சனன் தலைமை வகித்தார்.ஏஐடியூசி தலைவர் எம்.ராஜி,குழந்தைவேலு முன்னிலை வகித்தனர்.ஆர்பாட்டத்தில் தொழிலாளர்களின் 4 சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய சட்டமன்ற கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்பாட்டத்தில் ஏஐடியூசி மாவட்ட பொருளாளர் ஏ.முருகன்,மாவட்ட துணை செயலாளர் நடராஜன்,துணை தலைவர் மனோகரன்,கலை இலக்கிய பெருமன்றத்தின் முன்னாள் பொது செயலாளர் இரவீந்திரபாரதி, போக்குவரத்து துறை மண்டல செயலாளர் நாகராசன்,நெசவாளர் சங்க மாவட்ட செயலாளர் சாமிநாதன் ஆஸா மாவட்ட தலைவர் மேனகா,செல்வி நிர்வாகிகள் தமிழ்வாணன், முனியம்மாள் மற்றும் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story





