மது பாட்டில் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

தர்மபுரி மாவட்டம் அரூரில் மது பாட்டில் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து ஓட்டுநர் உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டத்தில் இருந்து சென்னை - சேலம் நோக்கி சென்ற மது சரக்கு வாகனம், அரூர் தனியார் மஹால் அருகே ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து இன்று வியாழக்கிழமை காலை விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த லாரி கவிழ்ந்ததில் மதுபாட்டிகள் கீழே விழுந்தது. குடிமக்கள் ஏராளமானோர் அந்த பாட்டில்களை அள்ளி சென்றனர்.மது பாட்டில்கள் உடைந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது இதனை, அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் ஜேசிபி மற்றும் கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர்.
Next Story