ஜெயங்கொண்டம் அருகே தைல மர குச்சிகளை பவுடராக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணின் புடவை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

X
அரியலூர், அக்.9- அரியலூர் மாவட்டம் வானதிரையன்பட்டினம் (ராம் நகர்) இருளர் தெருவை சேர்ந்த ராஜக்கண்ணு என்பவரது மனைவி சரோஜா (46) உள்ளிட்ட 9 பெண்கள் சூசையப்பர்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த பரணபாஸ் என்பவரது வயலில் தைல மர குச்சிகளை இயந்திரத்தில் பவுடராக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது தைல மர குச்சிகளை இயந்திரத்தில் போட்டு பவுடராக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சரோஜாவின் புடவை எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் சிக்கியது இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் உடல் முழுவதும் இயந்திரத்திற்குள் இழுத்து சென்றதால் சரோஜா பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனே இயந்திரத்தை நிறுத்திய நிலையில் சரோஜாவின் கால்கள் மட்டும் வெளியில் தெரிந்தது இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ரவிச்சக்கரவர்த்தி தலைமையிலான போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரோஜாவின் இடுப்பு முதல் கால் வரை மட்டுமே மிஞ்சிய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சரோஜாவின் கணவர் மற்றும் மகன் இறந்து விட்ட நிலையில் மகனின் பிள்ளைகளான 4 பேரப்பிள்ளைகளை சரோஜா வளர்த்து வந்தார் என்பது குறிப்பிடதக்கது. மேலும் உறவினர்கள் இறந்து போன சரோஜாவிற்கு நஷ்ட ஈடு கேட்டு திருச்சி டு சிதம்பரம் பைபாஸ் சாலை நடுவே மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story

