புளுதியூரில் கால்நடை விற்பனை ஜோர்
புளுதியூர் வாரசந்தையில் புதன்கிழமை தோறும் கால்நடைகள் விற்பனைக்காக வார சந்தை நடக்கிறது. நேற்று நடந்த சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கால்நடைகளை விற்க, வாங்க விவசாயிகள் வியாபாரிகள் வந்திருந்தனர் மாடுகள் ரகத்தை பொறுத்து ரூ.6000 - ரூ.29000 வரையும் ஆடுகள் ரூ.5000 -ரூ.10,200 வரையும், நாட்டுக்கோழிகள் ரூ.350 - ரூ.1200 வரை என 38 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்
Next Story




