வேப்பனப்பள்ளி: ரேஷன் கடை விற்பனையாளர் மீது தாக்கிய தாய் மகன் மீது வழக்கு.

X
கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மொரசுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (46) இவர் வேப்பனப்பள்ளி அடுத்த பரமல் கொட்டூர் ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த ஊரை சேர்ந்த முனியம்மா (45) என்பவர் உடன டியாக தனக்கு பொருட்கள் தருமாறு கூறினார். ராமகிருஷ்ணன் வரிசையில் வந்து பொருட்கள் வாங்கி செல்லுமாறு கூறினார். இதனால் அங்கு வாக்கு வாதத்தில் முனியம்மா மற்றும் அவரது மகன் சுதாகர் (27) ஆகியோர் ராமகிருஷ்ணனை தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்தனர். இதுகுறித்து ராமகிருஷ்ணன் வேப்பனப்பள்ளி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுதாகர், முனியம்மா ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story

