காட்டு மாடு தாக்கி பலியானவர் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் இழப்பீடு நிதி

காட்டு மாடு தாக்கி பலியானவர் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் இழப்பீடு நிதி
X
ஆத்தூர் மலை கிராமத்தில் காட்டு மாடு தாக்கி பலியானவர் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் இழப்பீடு நிதி வழங்கப்பட்டது
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி பெரும்பாறை மலை கிராமத்தில் காட்டு மாடு தாக்கி உயிரிழந்த கூலித் தொழிலாளி குடும்பத்திற்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவுறுத்தல் படி வனத்துறை சார்பில் இழப்பீடு நிதி வழங்கப்பட்டது பெரும்பாறை மலை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (70) விவசாய கூலி தொழிலாளியான இவர் அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் வேலை பார்த்து வருகிறார் தாண்டிக்குடி மேற்கு தொடர்ச்சி மலை பகுதி முழுவதும் காட்டு மாடுகளின் ஆதிக்கம் அதிகம் இருந்து வரும் வேளையில் கடந்த ஒன்றாம் தேதி தோட்டத்து வேலைக்குச் சென்ற முருகேசன் காட்டு மாடு தாக்கியதில் படுகாயம் அடைந்தார் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இந்நிலையில் உயிரிழந்த முருகேசன் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவுறுத்தலின் அடிப்படையில் இழப்பீடு நிதியாக ரூபாய் 10 லட்சம் ஒதுக்கப்பட்டது இதனை அடுத்து முதல் தவணையாக ரூபாய் 50 ஆயிரம் ரொக்க பணத்தை வத்தலக்குண்டு வனச்சரக அதிகாரிகள் முருகேசன் குடும்பத்தினரிடம் வழங்கினர் இந்நிகழ்வில் ஆத்தூர் முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் ஹேமலதா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிகண்டன் ஆகியோர் பங்கேற்று காட்டு மாடு தாக்கி உயிர் இழந்த முருகேசன் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.
Next Story