திருமங்கலத்தில் திமுகவினரின் ஆலோசனை கூட்டம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நேற்று (அக்.8) நடைபெற்ற தெற்கு மாவட்ட தி.மு.கழகத்தின் செயற்குழு ஆலோசனைக் கூட்டத்தில் வணிகவரி துறை அமைச்சர் மூர்த்தி அவர்களுடன் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் இணைந்து பங்கேற்று, மதவாத பாசிச சக்திகளை வீழ்த்தி 2026-ல் மீண்டும் கழக ஆட்சி அமைந்திட மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொள்கின்ற தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கைகளை (SIR) எதிர்கொள்வது குறித்தும் உரையாற்றினார்கள். இதில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய மற்றும் பேரூர் திமுங செயலாளர்கள், மாவட்ட துணைச் செயலாளர், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story



