கிழக்கு அய்யம்பாளையத்தில் நாடக மேடை அமைப்பதற்கான பூமி பூஜை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

கிழக்கு அய்யம்பாளையத்தில் நாடக மேடை அமைப்பதற்கான பூமி பூஜை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
கிழக்கு அய்யம்பாளையத்தில் நாடக மேடை அமைப்பதற்கான பூமி பூஜை எம்எல்ஏ துவக்கி வைத்தார். கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கடவூர் ஊராட்சியில்உள்ள கிழக்கு அய்யம்பாளையத்தில் ரூபாய் 8.50 லட்சம் மதிப்பீட்டில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய நாடக மேடை அமைப்பதற்கான பூமி பூஜை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த எம்எல்ஏ சிவகாமசுந்தரிக்கு பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தார் கடவூர் தெற்கு ஒன்றியசெயலாளர் சுதாகர். பூமி பூஜை முடிந்த பிறகு அதற்கான பணிகளை துவக்கி வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. இந்த நிகழ்ச்சியில் கடவூர் தெற்கு ஒன்றிய திமுக துணை செயலாளர்கள் குமரேசன் தமிழ் பொன்னுச்சாமி,கடவூர் தெற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி கஸ்தூரி தங்கராசு நிர்வாகிகள் கருணாநிதி சிவசக்தி சுதர்சன் பாலு என்கிற பாலசுப்பிரமணி ஊராட்சி செயலாளர் சசிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story