மலை கிராமத்தில் மரம் நடும் விழா
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள சித்தேரியில் இன்று வியாழக்கிழமை காலை வனத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் தர்மபுரி திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்று நடவு செய்தார். நிகழ்வில் பாப்பிரெட்டிப்பட்டி திமுக கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சந்தோஷ்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் மற்றும் வனத்துறை அலுவலர்கள், உடன் இருந்தனர்
Next Story





