கடவூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி.
கடவூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி. கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா கடவூர் ஊராட்சியில் உள்ள சமுதாயக் கூடத்தில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமி சுந்தரி தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் நடைபெற்றது. இந்த முகாமில் கடவூர் வட்டாட்சியர் மணிவண்ணன்,கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர் கடவூர் தெற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி கஸ்தூரி தங்கராசு,ஒன்றிய துணை செயலாளர் குமரேசன் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடவூர் வட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட கடைசி முகாம் என்பதால் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட மகளிர் ஏராளமானோர் மனு அளித்தனர். மேலும் பட்டா மாற்றம் பென்ஷன் மருத்துவ காப்பீடு அட்டை பெறுதல் ஆதார் அட்டை திருத்தம் ரேஷன் அட்டையில் திருத்தம் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களையும் அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட அரசு அதிகாரிகள் தகுதி வாய்ந்த விண்ணப்பங்களுக்கு உடனடியாக தீர்வு கண்டு பயனாளிகள் தேர்வு செய்து அவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி. முகாமில் மனு அளித்தவுடன் உடனே அது தொடர்பான நலத்திட்டங்களை வழங்கியதற்காக தமிழக அரசுக்கும் எம்எல்ஏ சிவகாமசுந்தரிக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
Next Story





