திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடுகள் ஆலோசனை!

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடுகள் ஆலோசனை!
X
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் தமிழ் கடவுள் ஆன முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக புகழ்பெற்றது. இந்த ஆலயத்தில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் முதன்மையானது கந்த சஷ்டி திருவிழாவாகும் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா வரும் அக்டோபர் 22 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி பெருவிழா துவங்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. . அக்டோபர் 28 ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆட்சித்தலைவர் இளம்பகவத், தலைமை தாங்கினார். தக்கார் அருள்முருகன், முன்னிலையில் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் இந்த கந்தசஷ்டி திருவிழாவின் போது செய்யப்பட வேண்டிய பணிகளான பொது சுகாதாரம், குடிநீர் வசதி, மின்சார வசதி, பேருந்து போக்குவரத்து வசதி, சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சென்னை திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயிலை இயக்கிட வேண்டுதல், கடல் பாதுகாப்பு பணி மேலும் தற்காலிக அலைபேசி கூடாரம் அமைத்தல், மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் வசதி, கோயில் பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களால் பக்தர்கள் பாதிக்கப்பட்டால் மருத்துவ சிகிச்சை வழங்கும் வகையில் வெறிநாய்க்கடிக்கான மருந்துகள் இருப்பு வைத்து கொள்ளுதல், தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் வைத்திருத்தல்,பாதுகாப்பு பணியில் போதிய காவலர்களை நியமித்தல் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மாவட்ட வருவாய் அலுவலர், போக்குவரத்துதுறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் செய்தியாளரிடம் பேசினார் அப்போது வருகிற அக்டோபர் 27ஆம் தேதி மாலை சூரசம்கார விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது இதற்கு பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன சுமார் 4000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் மேலும் தமிழக முழுவதும் இருந்து 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன தென்னக ரயில்வேக்கு சிறப்பு ரயிலை இயக்க கடிதம் வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
Next Story