கோவை: அவிநாசி சாலை மேம்பாலம் திறப்பு !

கோவையின் புதிய அடையாளமாகவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முக்கிய தீர்வாகவும் விளங்கும் பாலம் திறப்பு.
தமிழகத்தின் மிக நீளமான சாலை மேம்பாலமாக மதுரை–நத்தம் மேம்பாலம் (7.3 கி.மீ.) இருந்த நிலையில், அதை மிஞ்சும் வகையில் கோவையில் அவிநாசி சாலையில் 10.1 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலம் இன்று திறந்து வைக்கப்பட்டது. கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை நீளமாகப் பரவியுள்ள இந்த மேம்பாலம் இந்தியாவின் மூன்றாவது பெரிய தரைவழிப் பாலமாகும். தொழில்துறை வளர்ச்சிக்கும் போக்குவரத்து வசதிக்கும் பெரும் பங்களிப்பை வழங்கும் இப்பாலத்திற்கு புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் ஜி.டி. நாயுடு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புதிய அடையாளமாகத் திகழும் ஜி.டி. நாயுடு மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை கோவையில் திறந்து வைத்தார். திறப்பு விழா முடிந்ததும் முதல்வர் நடந்து சென்றும், பின்னர் காரில் பயணித்தபடியும் பாலத்தின் அமைப்பை பார்வையிட்டார். இப்போது பொதுமக்களின் வாகனப் போக்குவரத்துக்கு மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவையொட்டி முழு மேம்பாலமும் மின்விளக்குகளால் அழகாக அலங்கரிக்கப்பட்டது.
Next Story