பொள்ளாச்சியில் மனைவியை நடுரோட்டில் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவர் !

X
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த ஸ்வேதா (26) என்பவரை, அவரது கணவர் பாரதி (27) நடுரோட்டில் வாக்குவாதத்திற்குப் பிறகு கத்தியால் குத்திக் கொலை செய்தார். பெயிண்டர் தொழிலாளி பாரதி, கடந்த ஒரு ஆண்டாக மனைவியுடன் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இன்று காலை வேலைக்குச் சென்ற ஸ்வேதாவை வழியில் சந்தித்து வாக்குவாதம் செய்த அவர், தன் வசம் வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. கடுமையாக காயமடைந்த ஸ்வேதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தப்பி ஓட முயன்ற பாரதியை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பொள்ளாச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்வேதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
Next Story

