கோவை அருகே விபத்து: ஸ்கூட்டர் தடுப்புச்சுவரில் மோதி தாய், மகள் பலி !

கோவை அருகே விபத்து: ஸ்கூட்டர் தடுப்புச்சுவரில் மோதி தாய், மகள் பலி !
X
கோவை சுகுணாபுரத்தைச் சேர்ந்த சாந்தி (48) மற்றும் அவரது மகள் ஞானஸ்ரீ (24) ஆகியோர், நேற்று (அக். 9) குனியமுத்தூர் அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தனர். ஞானஸ்ரீ ஓட்டிச் சென்ற ஸ்கூட்டரில், சாந்தி மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவி அக்ஷயா (19) ஆகிய மூவரும் சென்று கொண்டிருந்தபோது, குனியமுத்தூர் பி.கே. புதூர் அருகே வாகனம் நிலைதடுமாறி சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதியது. இதில் ஞானஸ்ரீ சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயங்களுடன் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சாந்தி, வழியிலேயே உயிரிழந்தார்.படுகாயமடைந்த மாணவி அக்ஷயாவுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போக்குவரத்துப் புலனாய்வுப் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story