கரூர் துயர சம்பவத்தில் தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் மதியழகனை இரண்டு நாள் கஸ்டடி எடுத்த சிறப்பு காவல் துறையினர்

கரூர் துயர சம்பவத்தில் தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் மதியழகனை இரண்டு நாள் கஸ்டடி எடுத்த சிறப்பு காவல் துறையினர்
கரூர் துயர சம்பவத்தில் தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் மதியழகனை இரண்டு நாள் கஸ்டடி எடுத்த சிறப்பு காவல் துறையினர். கடந்த மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் சார்பில் கட்சியின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம் குறித்து தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தை விசாரணைக்கு அமைத்தது. அதேசமயம் உயர்நீதிமன்ற மதுரை கிளை வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த குழு கரூரில் விசாரணை துவக்கிய நிலையில்,இந்த சம்பவத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட தமிழக வெற்றி கழக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை இன்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவரிடம் விசாரணை மேற்கொள்ள ஐந்து நாள் கஸ்டடி கேட்டு விண்ணப்பித்தனர். நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு இரண்டு நாள் கஸ்டடியில் அனுமதிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் அவரை கஸ்டடியை எடுத்துச் சென்றனர். இது குறித்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சென்னை வழக்கறிஞர்கள் தெரிவிக்கும்போது, மதியழகன் இடம் ஏற்கனவே கரூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதனால் அவருக்கு கஷ்டடி அளிக்க வேண்டாம் என தெரிவித்தோம். ஆயினும் சிறப்பு (எஸ் ஐ டி ) குழுவினர் மதியழகன் இடம் கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் அதற்கு ஐந்து நாள் கஸ்டடி வேண்டும் என நீதிமன்றத்தில் எடுத்துரைத்தனர். வழக்கறிஞர்களின் வாதப்பிரதிவாதங்களை கேட்ட நீதிபதி மதியழகனுக்கு இரண்டு நாள் கஸ்டடி அளிப்பதாகவும் கஸ்டடியில் இருக்கும் போது அவரை துன்பப்படுத்தவோ காயப்படுத்தவோ கூடாது எனவும் தேவையான மருத்துவ வசதிகளையும் அவரது உறவினர்களையும் வழக்கறிஞர்களையும் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு இரண்டு நாள் அனுமதி அளித்தது என தெரிவித்தனர் இதனை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழுவினர் மதியழகனை பாதுகாப்பாக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
Next Story