வாங்க கற்றுக் கொள்ளலாம் என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு தீயணைப்பு துறையினர் அழைப்பு.

வாங்க கற்றுக் கொள்ளலாம் என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு தீயணைப்பு துறையினர் அழைப்பு.
வாங்க கற்றுக் கொள்ளலாம் என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு தீயணைப்பு துறையினர் அழைப்பு. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் அவர்களின் உத்தரவின் படி அக்டோபர் 11 மற்றும் அக்டோபர் 12 ஆகிய இரண்டு நாட்களில் வாங்க கற்றுக் கொள்வோம் (come and learn) என்ற தலைப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்களில் பயிற்சி கட்டணங்கள் ஏதும் இல்லாமல் காலை 10 மணி முதல் 11 மணி வரை, 12 மணி முதல் 1 மணி வரை மற்றும் 4 மணி முதல் 5 மணி வரை பயிற்சி நடத்தப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. என தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை கரூர் மாவட்டம் மாவட்ட அலுவலர் வடிவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story