முருங்கப்பட்டி பகுதியில் பொதுமக்கள் இடம் குறை கேட்பு கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு..

முருங்கப்பட்டி பகுதியில் பொதுமக்கள் இடம் குறை கேட்பு  கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு..
X
முருங்கப்பட்டி பகுதியில் பொதுமக்கள் இடம் குறை கேட்பு கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட முருங்கப்பட்டி, பகுதியில் பொதுமக்களிடத்தில் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், பங்கேற்று அப்பகுதி பொதுமக்களிடத்தில் குறைகளை கேட்டு அறிந்தார். பின்னர் தமிழக அரசின் பல்வேறு அரசு நலத்திட்டங்கள் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் பொதுமக்களிடம் விளக்கி கூறி தொடர்ந்து பொதுமக்களிடத்தில் மனுக்களை பெற்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதில் அட்மா குழு தலைவர் கே.பி. ஜெகநாதன், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், என பலர் கலந்து கொண்டனர்.
Next Story