திருமாநிலையூர்-தனியார் பேருந்து வேகமாக இயக்கியதால் பேருந்தில் இருந்து பயணி கீழே விழுந்து விபத்து.

திருமாநிலையூர்-தனியார் பேருந்து வேகமாக இயக்கியதால் பேருந்தில் இருந்து பயணி கீழே விழுந்து விபத்து.
திருமாநிலையூர்-தனியார் பேருந்து வேகமாக இயக்கியதால் பேருந்தில் இருந்து பயணி கீழே விழுந்து விபத்து. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வடகரை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் வயது 47. இவர் புதன்கிழமை அன்று மதியம் 12:45 மணியளவில் திருமாநிலையூர் அருகே உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தார். திருச்சி மாவட்டம் முசிறி மேல வடுகப்பட்டி லட்சுமி நகரை சேர்ந்த ஜெகதீஷ் வயது 26 என்பவர் அந்த தனியார் பேருந்தை வேகமாக இயக்கியதால் பேருந்தில் பயணித்த செல்வராஜ் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அவரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த செல்வராஜின் மனைவி தேன்மொழி வயது 35 என்பவர் அளித்த புகாரில் பேருந்தை வேகமாக இயக்கி விபத்து ஏற்படுத்திய ஜெகதீஷ் மீது பசுபதிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story