தீயணைப்பு செயல்முறை விளக்க முகாம் பயன்பெற தீயணைப்பு துறையினர் அழைப்பு

X
Komarapalayam King 24x7 |9 Oct 2025 7:53 PM ISTஅக். 11, 12ல் தீயணைப்பு செயல்முறை விளக்க முகாம் பயன்பெற தீயணைப்பு துறையினர் அழைப்பு
குமாரபாளையத்தில் அக். 11, 12ல் தீயணைப்பு செயல்முறை விளக்க முகாம் நடக்கவுள்ளதால், பொதுமக்கள் பயன்பெற தீயணைப்பு துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர். நிலைய அலுவலர் தண்டபாணி கூறியதாவது: தீயணைப்புத் துறை இயக்குனர் சீமா அகர்வால் உத்திரவின்படி குமாரபாளையத்தில் அக். 11, 12ல் தீயணைப்பு செயல்முறை விளக்க முகாம் நடக்கவுள்ளது. இந்த முகாம் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட், உழவர் சந்தை, காவேரி நகர், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, ராஜம் தியேட்டர், கௌரி தியேட்டர் பிரிவு, உள்ளிட்ட பல இடங்களில் இந்த செயல்முறை விளக்க முகாம் நடக்கவுள்ளது. தீ விபத்துக்களிலிருந்து பாதுகாத்து கொள்வது எப்படி? என்பது குறித்து இந்த செயல்முறை விளக்க முகாமில் பங்கேற்று பயன் பெற அழைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
