மூலனூர் பகுதியில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு

மூலனூர் பகுதியில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு
X
மூலனூர் சந்தை பகுதியில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்
திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில், எய்ட்ஸ் நோய்த் தொற்று குறித்து தீவிர விழிப்புணர்வு பிரசாரம் மூலனூர் பகுதியில் நடந்தது. அதன்படி அண்ணாநகர் வாரச்சந்தையில் நாட்டுப்புற கலைகள் மூலம் பொதுமக்களுக்கு எய்ட்ஸ் நோயின் ஆபத்துகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மூலனூர் ஆரம்ப சுகாதாரமைய மருத்துவர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர்.
Next Story