ராசிபுரம் அருகே வன உயிரின வார விழா..

X
Rasipuram King 24x7 |9 Oct 2025 8:24 PM ISTராசிபுரம் அருகே வன உயிரின வார விழா..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வனப்பகுதியில் நடைபெற்ற வன உயிரின வாரவிழா கொண்டாடத்தில் அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் அழைத்துச்செல்லப்பட்டு வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழக வனத்துறை சார்பில் வன உயிரின வாரவிழா கொண்டாடப்படுவதையொட்டி ராசிபுரம் சரக வனத்துறை சார்பில் வன உயிரின வாரவிழா மல்லூர் காப்புக்காடு பகுதியில் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ் உத்தரவின் பேரில் ராசிபுரம் வனச்சரக அலுவலர் ம.சத்யா தலைமையில் நடைபெற்ற விழாவில், ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி, புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, தூய இருதய மேல்நிலைப்பள்ளிகளின் மாணவர்கள் மல்லூர் பகுதியில் உள்ள காப்புக்காடு பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு வனப்பாதுகாப்பு, வன உயிரின பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை தொடர்ந்து மல்லூர் காப்புக்காடு பகுதியில் உள்ள கல்லாங்குளம் வனச்சரகம் முதல் மாமரத்து ஓடை சரகம் வரை இரண்டு கிலோ மீட்டர் தொலைவு மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்களுக்கிடையே வனவிலங்கு வார விழிப்புணர்வு தொடர்பான வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி ஆசிரியர்கள், வனத்துறையினர் பங்கேற்றனர்.
Next Story
