காங்கேயத்தில் அதிமுக ஐடி விங் ஆலோசனை கூட்டம்

X
காங்கேயம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில், காங்கேயம் என்.எஸ்.என். திருமண மண்டபத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு, வாக்குசாவடி நிலை முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ., என்.எஸ்.என். நடராஜ் தலைமை தாங்கினார். நகரச்செயலாளர் வெங்கு மணிமா றன் முன்னிலை வகித்தார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நல்ல திட்டங்கள் குறித்தும், இனி செய்யப்போகும் திட்டங்கள் குறித்தும் தொழில்நுட்ப பிரிவினர் பொதுமக்களுக்கு தகவல்களை பரிமாற வேண்டும். பூத் கமிட்டி நிர்வாகிகள் தங்களின் பூத்துக்கு உட்பட்ட வீடுகளுக்கு தினசரி சென்று வாக்கு சேகரிக்க வேண்டும். மேலும் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் விவரங்களை தரவு செய்து பட்டியலை சரிசெய்ய வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட தேர்தல் பிரிவு பொருளாளரும் கிணத்துக்கடவு எம்எல்ஏ தாமோதரன், மாவட்ட பொருளாளர் கிஷோர்குமார், காங்கேயம் நகர ஐடி விங் செயலாளர் ரகுபதி, ஒன்றிய ஐடிவிங் செயலாளர் நித்திஷ், வெள்ளகோவில் நகர ஐடி விங் செயலாளர் ராம்குமார், வெள்ளகோவில் ஒன்றிய ஐடி விங் செயலாளர் தனசேகர், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் லட்சுமி சோமசுந்தரம், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் துரைசாமி, தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் லோகேஷ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

