சைபர் கிரைம் காவல்துறையினர் சார்பாக விழிப்புணர்வு பேரணி

சைபர் கிரைம் காவல்துறையினர் சார்பாக விழிப்புணர்வு பேரணி
X
திண்டுக்கல்லில் சைபர் கிரைம் காவல்துறையினர் சார்பாக விழிப்புணர்வு பேரணி
திண்டுக்கல் சைபர் கிரைம் காவல்துறையினர் மற்றும் GTN- கல்லூரி இணைந்து சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் விக்டோரியா லூர்து மேரி கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் ஊர்வலத்தின் போது அப்பகுதியில் உள்ள கடைகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் கடைகளில் உரிமையாளர்களுக்கு சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து சைபர் குற்ற உதவி எண் 1930 பற்றி எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், சைபர் கிரைம் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
Next Story