தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சமத்துவம் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல் பேரணி

X
பெரம்பலூர் அன்பகம் சிறப்பு பள்ளியில் பிரம்மாகுமாரிகள் அமைப்பு சார்பில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சமத்துவம் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல் பேரணி தொடங்கியது. பெரம்பலூர் அன்பகம் சிறப்பு பள்ளி தாளாளர் மற்றும் ரீடு தொண்டு நிறுவன தலைமை நிர்வாக இயக்குநர் முனைவர் ரீடு செல்வம் பெரம்பலூர் ரோவர் கல்வி குழுமங்களின் சோமன் வரதராஜன் மற்றும் ரீடு நிர்வாக இயக்குநர் ஷகிலா ஆகியோர் பேரணி வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர். தமிழக அரசுடன் பிரம்மாகுமாரிகள் அமைப்பு இணைந்து நடத்தக்கூடிய இந்த பேரணியானது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அன்பகம் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் நடைபெற்றது.அன்பகம் ஆரம்பகால பயிற்சி மையம் அன்பகம் சிறப்பு பள்ளி அன்பகம் மறுவாழ்வு இல்லத்திலுள்ள அறிவுசார் குறைபாடுடைய மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி மகிழ்வித்தனர்.இந்நிகழ்வில் பிரம்மாகுமாரிகள் அமைப்பை சேர்ந்த மல்லி பிருந்தா ராமகிருஷ்ணன் உட்பட 15 போர் கொண்ட குழுவினர் பேரணி வாகனத்துடன் வருகை தந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர். அன்பகம் சிறப்பு பள்ளி அனைத்து பணியாள்களுக்கும் இந்நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.
Next Story

