நாகை மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதல் போட்டி

நாகை மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதல் போட்டி
X
பள்ளி மாணவர்கள் திரளாக கலந்து கொள்ள அழைப்பு
நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது நாகை மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகம் சார்பில், திருக்குறள் முற்றோதல் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில், 1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் பள்ளி மாணவர்களுக்குரூ.15 ஆயிரம் ரொக்கப் பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. இதற்கு tamilvalarchithurai என்ற இணையத் தளத்தில் விண்ணப்பிக்கலாம். இப்போட்டியில் பங்கு கொள்ள வருகிற 31-ம் தேதி கடைசி நாளாகும். எனவே, பள்ளி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story