டூவீலர் மீது கார் மோதியதில் ஒருவர் பலி.

டூவீலர் மீது கார் மோதியதில் ஒருவர் பலி.
X
மதுரை மேலூர் அருகே டூவீலர் மீது கார் மோதியதில் ஒருவர் பலியானார்.
திண்டுக்கல் மாவட்டம் புலிக்கோட்டையூரை சேர்ந்த குருமநாதன் (46) என்பவர் மேலுார், கருத்தபுளியம்பட்டியில் குடும்பத்தினருடன் தங்கி வாகனங்கள் பழுது நீக்கும் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று( அக்.9) மதியம் கருத்தபுளியம்பட்டி - மேலுாருக்கு நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ு கொண்டிருந்த போது பின்னால் வந்த திருச்சி - மதுரை நோக்கி சென்ற கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story