தேனியில் கல்லூரி மாணவி தற்கொலை

தேனியில் கல்லூரி மாணவி தற்கொலை
X
தற்கொலை
தேனி மாவட்டம், சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் வர்ஷினி பிரியா (18). கல்லூரி மாணவியான இவருக்கு கடந்த சில வருடங்களாக தீராத தலைவலி இருந்து வந்துள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்தும் பலன் அளிக்காத காரணத்தினால் மன வேதனையில் இருந்து வந்த வர்ஷினி பிரியா நேற்று (அக்.9) அவரது பெற்றோர்கள் கோவிலுக்கு சென்ற பொழுது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து சின்னமனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு.
Next Story