தூத்துக்குடி மகளிர் பூங்காவில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

X
தூத்துக்குடி மகளிர் பூங்காவில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடியில், புற்றுநோய் பிரிவு மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் இணைந்து மாநகராட்சி மகளிர் பூங்காவில் வைத்து நடைபயிற்சி பெற வரும் பெண்களிடம் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், புற்றுநோய் துறை பேராசிரியர் டாக்டர் லலிதா ராமசுப்பிரமணியம், உதவி பேராசிரியர்கள் இன் சுவை, ஆக்னஸ், லலிதா, உதவி உறைவிட மருத்துவர் ஃபெபின் கோர்டெக்ஸ், உறைவிட மருத்துவர் ஜே. சைலஸ் ஜெயமணி உட்பட பலர பங்கேற்றனர்.
Next Story

