யானைகள் கூட்டமாக தண்ணீர் அருந்தும் காட்சி வைரல்!

X
கோவை மாவட்டம் தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் வறட்சி நிலவுவதால், வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வனத்துறையினர் வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகளை நிரப்பி வைக்கின்றனர். இந்நிலையில், வீரபாண்டி கிராமம் அருகே உள்ள சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி நிலையம் பகுதியில், யானைகள் கூட்டமாக வந்து தொட்டியில் இருந்து தண்ணீர் அருந்தும் காட்சி ஒருவர் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வறட்சியை சமாளிக்க மேலும் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

